அட்லாண்டாவில் விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு

by Editor / 10-10-2021 04:50:31pm
அட்லாண்டாவில்  விமான விபத்து:  4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள தெகால்ப் பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில் விமானி உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். விபத்திற்கான காரணம் பற்றி எதுவும் தெரிய வரவில்லை.இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து பற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்த உள்ளது.

 

Tags :

Share via

More stories