நடிகர் ரஜினிகாந்த் கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்

by Editor / 13-05-2021 04:00:31pm
நடிகர் ரஜினிகாந்த் கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஆனால் அப்போது படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கும் கூட உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த்.

ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு நேற்று தனி விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து இன்று கொரோனா 2-வது தடுப்பூசி ரஜினிகாந்த் போட்டுக் கொண்டார்.

ரஜினிகாந்த் 2-வது தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படத்தை சமூக வலைதளங்களில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் கொரோனா முதலாவது தடுப்பூசியை எப்போது போட்டுக் கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

 

Tags :

Share via

More stories