டெல்லி ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

by Admin / 25-06-2023 11:24:11pm
டெல்லி ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி டெல்லியில் பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளைக்காடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பிரீத் விகாரை சார்ந்த சாட்சி அகுஜா தன் குழந்தைகளுடன் டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது நடைபாதையில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து செல்ல அருகில் இருந்த மின்சார கம்பத்தை பிடித்துள்ளார். அப்பொழுது திடீரென்று அவர் மீது மின்சாரம் பாய்ந்ததை அடுத்து அவர் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தா.ர் இதை அறிந்த அவருடைய குடும்பத்தினர் போலீசாரின் உதவியுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர் .அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரயில்வே துறை அதிகாரிகளின் கவனமின்மையால்  தங்களுடைய மகளுக்கு இந்த மாதிரியான நிலை ஏற்பட்டுள்ளதாக சாட்சி அகுஜாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
 

Tags :

Share via

More stories

Logo