தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் - இறுதி பட்டியல் வெளியீடு.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. அதன்படி 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செய்யப்பட்டன.
அதன் பிறகு அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28-ந்தேதி வரை பெறப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வம்பர் 29-ந்தேதி முதல் கடந்த 24-ந்தேதி வரை பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இருக்கின்றனர். 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பெண் வாக்காளர்களும், 9 ஆயிரத்து 120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.91 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை கீழ்வேளூர் தொகுதியில் 1.76 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
Tags : தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் - இறுதி பட்டியல் வெளியீடு