உணவகத்தில் கஞ்சா விற்பனை

சென்னை ராயப்பேட்டையில் துரித உணவகத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா வாங்குவோர் போல அங்கு சென்ற போலீசார் விற்பனையில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பைக்கில் சென்று விற்பனை செய்தவர்களையும் கைது செய்தனர். மேலும் 10 கிலோ கஞ்சா, ₹40 ஆயிரம் பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags :