குளிர் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

by Admin / 27-08-2021 03:14:22pm
குளிர் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

குளிர் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வழக்கமாக குளிர்காலத்தில் இருமல், ஜலதோஷம் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பொதுவாக ஜலதோஷம், கொரோனா வைரஸ்களால் ஏற்படுவதால், வெப்பநிலை குறையும்போது அது தொற்றை ஏற்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது.

 இதற்கு காரணம் அங்கு தற்போது குளிர்காலம் என்பதால்தான் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்காலம் வைரஸ் வளர்வதற்கு ஏற்ற காலம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம் என்றும், இதன்மூலம் கொரோனா 3-ம் அலையை தவிர்க்க முடியும் எனவும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
 

 

Tags :

Share via