ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கியது
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந் நிலையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் இன்றும், நாளையும் தொடக்க பள்ளி ஆசிரியர் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 29ஆம் தேதியான இன்று தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், நாளை மே 30ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Tags :
















.jpg)


