தமிழக முதல்வர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள்-தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் ஆய்வு.

by Editor / 05-12-2022 11:49:12pm
தமிழக முதல்வர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள்-தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் ஆய்வு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள கணக்குப்பிள்ளை வலசைதனியார் பள்ளி மைதானத்தில் வரும் 8ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்ள உள்ளார். இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் விழா நடைபெறும் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர், டி.ஐ.ஜி,எஸ்.பி.யுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக அவர்  தொடர்ந்து, முதல்வர் ரயில் மூலம் வந்திறங்க உள்ள தென்காசி ரயில் நிலையம் மற்றும் முதல்வர் ஓய்வெடுக்க உள்ள குற்றாலம் அரசினர் விருந்தினர் மாளிகை, முதல்வர் பயணிக்கக்கூடிய சாலைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த தென்மண்டல ஐஜி, முதல்வர் செல்லக்கூடிய சாலைகளில் மற்றும் ரயில் நிலையங்களில் செய்யப்படக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 அவருடன், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும்நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார்,  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் உள்ளிட்டார் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள்-தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் ஆய்வு.
 

Tags :

Share via