வெடிவிபத்தில் 4 மாணவர்கள் பலி

உத்தரபிரதேசத்தில் பண்டேல்கண்ட் கவுரவமஹோத்சவ் விழாவையொட்டி, சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் நடந்த வெடி விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். திருவிழாவின் போது பட்டாசு வெடிக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. உயிரிழந்த மாணவர்கள் பிரபாத், யாஷ், பராஸ் மற்றும் மோஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Tags :