85 வயதில் பட்டப் படிப்பை நிறைவு செய்த மூதாட்டி;

by Editor / 18-10-2021 04:04:45pm
85 வயதில் பட்டப்  படிப்பை நிறைவு செய்த மூதாட்டி;

 

 73 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி படிப்பை நிறுத்தியவர் தற்போது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
இஸ்ரேலிய படையெடுப்பின் போது ஜிஹாத் புட்டோ என்ற சிறுமி நப்லஸ் நகரை விட்டு 1948-ஆம் ஆண்டு குடும்பத்துடன் வெளியேறினார். இதனையடுத்து ஜிஹாத் புட்டோக்கு நாசரேத் நகரில் திருமணம் முடிந்து 7 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இந்நிலையில் ஜிஹாத் புட்டோ கல்வி மீது கொண்ட பற்றினால் 81 வயதில் மீண்டும் பள்ளி படிப்பை தொடங்கினார்.


அதன்பின் ஜிஹாத் புட்டோ கஃபர் பாரா இஸ்லாமிய ஆய்வு கல்லூரியில் சேர்ந்தார். இதனைதொடர்ந்து ஆன்லைன் வகுப்பு மூலமாக கல்லூரி படிப்பை முடித்த ஜிஹாத் புட்டோ இளங்கலை பட்டத்தை வென்றார். இதனால் தற்போது ஜிஹாத் புட்டோ பிற பெண்களுக்கு வகுப்பெடுத்து வருகிறார்..

 

Tags :

Share via
Logo