அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது அம்பை நீதிமன்றம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியினுடைய என் மண் என் மக்கள் என்கின்ற பாதயாத்திரை பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது அப்பொழுது பாஜகவின் விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பிரிவினுடைய மாநில தலைவரும் இந்த யாத்திரையின் இணை பொறுப்பாளருமான அமர் பிரசாத் ரெட்டி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆழ்வார்குறிச்சி போலீசார் ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்த போலீசார் இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக நேற்று சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்து மூலமாக அழைத்துவரப்பட்டார் .இந்த நிலையில் இன்று அவர் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தொடர்ந்து அம்பை நீதிமன்றத்தில் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
Tags :