அமொிக்கா -அயர்லாந்து போட்டி மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை டி20 போட்டியில் இன்று பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் பப்புவா நியூ ஜெனியா அணியும் ஆப்கானிஸ் தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பப்புவா நியூ ஜெனியா அணி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த ஆப்கானிஸ்தான் அணி 15 புள்ளி ஒரு ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டி சர் விவியன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. ஓமன் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஓமன் அணி 13.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த இங்கிலாந்து அணி மூன்று புள்ளி ஒரு ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
: இன்னொரு போட்டி மழையின் காரணமாக ஃப்ளோரிடா சென்ட்ரல் ப்ரோ வர்ட் பார்க் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருந்த அமொிக்கா -அயர்லாந்து போட்டி மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags :