ரயில்வே கேட் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி விபத்து

தெற்கு ஜெர்மனியில் ஆளில்லா ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ரயில் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மேலும் சில பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஜெர்மனியின்உல்ம் நகருக்கு அருகே சென்ற பயணிகள் பேருந்து ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நடுவில் சிக்கிக் கொண்டது. இந்த நிலையில் அதிவேகமாக வந்த ரயில் பேருந்து மீது பலமாக மோதியது பேருந்து தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :