மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி

by Editor / 18-12-2023 10:58:00pm
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார். முன்னதாக, கொட்டும் மழையில் சாலைகளில் நடந்து சென்றும், பேருந்தில் பயணித்தும் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.

மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மருத்துவம், உணவு, உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். உதவி வேண்டுவோர் 80778-80779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்தார்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இலங்கையை ஒட்டியுள்ள தென்கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது.

இதன் காரணமாக, இந்த மாவட்டங்களில் உள்ள ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

Tags : மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி

Share via

More stories

Logo