திமுக பெண் நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு

by Staff / 03-11-2023 12:04:54pm
திமுக பெண் நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு

அமைச்சர் எ.வ.வேலுவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவரும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளருமான கோவை மீனா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மீனா வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மீனா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அவரது கணவரிடம் விசாரணை நடைபெறுகிறது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories