தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்தியத் தலைமை த்தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இரண்டு நாள் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ,மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இவ் ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் .தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த புகார் தெரிவிப்பதற்கு என்று செயலி ஒன்று உள்ளது எனவும் இதன் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிக்கப்பட்ட 100 நிமிடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 17 மாவட்டங்களில் உள்ள 145 எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்..
Tags :