ஜனநாயகம் திரைப்படத்தின் காட்சிகளை முகநூலில்பகிர்ந்ததற்காக காவல்துறையினரால் கைது
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையின் சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்கும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் யுவராஜ் என்பவர் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படத்தின் காட்சிகளை தம் லேப்டாப்பில் பார்த்து அதை முகநூலில்பகிர்ந்ததற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருக்கும் இடத்தில் திரைப்படங்களைப் பார்த்து அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டதற்காக யுவராஜ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜனநாயகம் திரைப்படம் இணையத்தில் சட்ட விரோதமாக கசிந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக திரையிடப்படாத திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமான செயல் என்பதால் அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
Tags :



















