கோடைவெயிலின் தாக்கம்..காரணமாக பார்வதிக்கு 23.50இலட்சத்தில் நீச்சல்குளம்.

by Editor / 16-04-2023 10:17:14pm
கோடைவெயிலின் தாக்கம்..காரணமாக பார்வதிக்கு 23.50இலட்சத்தில் நீச்சல்குளம்.

நாடெங்கிலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என் தொடர்ச்சியாக மனிதர்களே கோடை வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு ஆறுகள், குளங்களிலும் நீர் நிலைகளிலும் நீர் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரையில் நிதி அமைச்சர் பி.தியாகராஜன் இன்று  காலை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வளர்க்கப்பட்டு வரும் யானை பார்வதியை வாழ்த்தி ரூபாய் 23.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள யானை குளிக்கும் நீச்சல் குளத்தை திறந்து வைத்தார், மேலும் சென்னை சில்க்ஸ் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கோவில் தெருக்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக நான்கு சன்செட் நடைபாதைகளையும் திறந்து வைத்தார், மேலும் இதன் தொடர்ச்சியாக அவர் எம்.எல்.ஏ.வாக உள்ள தொகுதியில் மே 22 முதல் நவம்பர் 22 வரை நடைபெற உள்ள வேலை அறிக்கையின் நகலை வெளியிட்டார். மேலும் கே.புதுரில் உள்ள லூர்து அன்னை ஆலயத்தில் பொதுமக்களுக்காக இலவச சுகாதார முகாமையும் தொடங்கி வைத்தார்.


 

கோடைவெயிலின் தாக்கம்..காரணமாக பார்வதிக்கு 23.50இலட்சத்தில் நீச்சல்குளம்.
 

Tags : 23.50இலட்சத்தில் நீச்சல்குளம்.

Share via