இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

by Editor / 23-01-2023 09:14:37am
இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

 

Tags :

Share via