போலி ஆடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியதாகும்-

by Admin / 27-04-2023 10:06:26am
போலி ஆடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியதாகும்-

தமிழ்நாடு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல்தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.தான் பேசியதாக வெளியிட்ட இரண்டு ஆடியோக்களும் உண்மைத்தன்மையற்றவை அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்றும் திமுகவின் மீது திமுக நடத்த நல்லாட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்துகிற நோக்கத்தோடு வெளியிடப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.
.பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை நிதி அமைச்சர் பேசியதாக ஆடிய ஒன்றை டிஎம்கே பைல் ஒன் டிஎம்கே ஃபைல் இரண்டு என்கிற அறிக்கையோடு வெளியிட்டிருந்தார்

 நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல்தியாகராஜன் பேசியதாக  முதல் ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டிருந்தார். இரண்டாவது ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.. . இதற்கு மறுப்பு தெரிவித்து பழனிவேல்தியாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

.அதில், இது போன்ற போலி ஆடியோக்களை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியதாகும் .அதற்கு சான்றாகவும் சில மாதிரிகளை வெளியிட்டு , இந்த ஆடியோக்கள் கணினி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதனால் இதற்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தன்னுடைய வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
 சமூக வலைத்தளங்களில் இது போன்று வரும் ஆடியோக்களை நான் பேசவில்லை அது முற்றிலும் போலி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்பா.ஜ.க.  மாநில தலைவர் குறிப்பிட்ட ஒரு நபரோடு பேசுவதாக வெளியிட்ட ஆடியோ ஒரு  கீழ் தரமான செயல் என்றும்  முதலமைச்சர்  மு க ஸ்டாலின் தலைமையில் திமுக கழகம் சிறப்பான ஆட்சியை செய்து வருவதோடு  நல்ல பல  திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.. இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், இந்த நவீன தொழில்நுட்பத்தின் வழியாக மலிவான உத்திகளை கையாண்டு  இந்த  ஆடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் சபரீசனால் தான் அரசியலுக்கு வந்ததாகவும் அவர் தனக்கு  ஒரு அரசியல் ஆசானாகவும் விளங்குவதாகவும் நாளைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பற்றியும் நான் பேசியதாக வந்திருக்கும் ஆடியோ அப்பட்டமான பொய் என்பதையும் இது ஒரு பிளாக் மெயில் கும்பலினுடைய வேலை என்றும் அவர் தெரிவித்ததோடு திமுகவின் மீது பழி சுமத்தி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடக்கூடிய ஒரு கோழைத்தனமான முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் திமுக தொடங்கியதில் இருந்து அனைவரும் ஒரே கழகம் ஒரே குடும்பம் என ஒற்றுமையாக இயங்கி வருகிறோம் என்றும் இனிவரும் காலங்களிலும் அவ்வாறேதொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via