வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் என்று கூறி முதலமைச்சர் உட்பட பலரையும் ஏமாற்றிய நபர் கைது.

by Editor / 27-04-2023 10:31:29am
வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் என்று கூறி முதலமைச்சர் உட்பட பலரையும் ஏமாற்றிய நபர் கைது.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டன் எனக்கூறி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் போலியான கோப்பையை காண்பித்து, புகைப்படம் எடுத்துக்கொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் பாபு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  406, 420 பிரிவுகளின் வழக்குகள் பதிவு செய்தனர். பாகிஸ்தானை வீழ்த்தி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வந்துள்ளதாக கூறி கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதலமைச்சரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. வினோத் பாபு பாஸ்போர்ட் கூட இல்லாமல் பாகிஸ்தானில் நடந்த போட்டியில் கோப்பை வென்றதாக கூறி முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo