வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம்

by Staff / 29-08-2023 12:29:34pm
வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆண்டுதோறும் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம், இன்று தொடங்கி 10 நாட்கள் திருவிழாவையொட்டி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருகை தருவதால், நாகப்பட்டினம் மாவட்டம் விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவை பாதை செப்டம்பா் 1ஆம் தேதியும், திருதோ் பவனி செப்டம்பா் 7ஆம் தேதியும், செப்டம்பா் 8ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நடைபெறுகிறது, மாலை 6 மணியளவில் திருக்கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

 

Tags :

Share via