மணிப்பூர் சட்டப்பேரவை இன்று கூடுகிறது

by Staff / 29-08-2023 12:37:03pm
மணிப்பூர் சட்டப்பேரவை இன்று கூடுகிறது

மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரம், வன்முறை என்ற மோசமான சூழ்நிலை கட்டுக்குள் வந்ததை அடுத்து அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. அங்கு குகி -மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சட்டமன்றம் கூடும் நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து பேரவையை அதிர வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via