தீபாவளி ரயில் முன்பதிவு: 10 நிமிடங்களில் டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தது.
தீபாவளி பண்டிகையானது இந்த வருடம் அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பங்களுடன் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில், சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அக்டோபர் - 17-ம் தேதி வெள்ளிக்கிழமையே சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பார்கள்.
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 20ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு ரயிலில் செல்வார்கள். அக்டோபர் 16-ல் சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று (ஆக.17) தொடங்கியது. இதையடுத்து ஆக.17 ஊருக்கு செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று (ஆக.18) தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.
குறிப்பாக, 60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், சனிக்கிழமை பயணம் செய்பவர்கள் நாளை மறுநாளும், ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்பவர்கள் புதன்கிழமையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பொதுமக்கள் இதை முறையாக பயன்படுத்தி தங்களது பயணங்களின் போது கூட்ட நெரிசலில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட குறிப்பிடத்தக்கது.
Tags : தீபாவளி ரயில் முன்பதிவு: 10 நிமிடங்களில் டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தது.



















