மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் கனமழை - குற்றால அருவிகளில் குளிக்க தடை.

by Staff / 18-08-2025 10:24:53am
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் கனமழை -  குற்றால அருவிகளில் குளிக்க தடை.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்தானது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபாய ஒலி எழுப்பி சுற்றுலா பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர்.

இந்த நிலையில், தற்போது வரை தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய குற்றால அருவியில் 4-வது நாளாக குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் கனமழை - குற்றால அருவிகளில் குளிக்க தடை.

Share via