முதலமைச்சர் கை காட்டும் நபரே அடுத்த பிரதமர் - துரைமுருகன்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தனை ஆதரித்து பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், “வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது. கட்டாயமாக மத்தியில் ஆட்சி மாறும். பாஜக தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டும் நபரே இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார்” என்றார்.
Tags :