எஸ்.வி. சேகர் தண்டனை நிறுத்தி வைப்பு
பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவிற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதி்த்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :