தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி -ராகுல் காந்தி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

by Admin / 28-01-2026 07:55:23pm
தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி -ராகுல் காந்தி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

டெல்லியில் இன்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்- தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி -ராகுல் காந்தி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்..திமுக காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறியை தீர்த்து கூட்டணி உறுதிப்படுத்தவே  இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 2021 தேர்தலை விட இந்த முறை காங்கிரஸுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. காங்கிரசுக்கு சுமார் 28 முதல் 36 தொகுதிகள் மற்றும் ஒன்று இரண்டு மாநிலங்களவை இடங்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்..ஆட்சியில் பங்கு போன்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கோரிக்கைகள் மற்றும் சமீபத்திய கருத்து முதல்வர்கள் குறித்தும் கூட்டணியின் ஒற்றுமை சிதையாமல் தேர்தலை சந்திப்பது குறித்தும் கனிமொழி ராகுல் காந்தியுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சந்திப்பை நிகழ்ந்துள்ளது. இதன் மூலம் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி -ராகுல் காந்தி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
 
Tags :

Share via