திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு கோவிலில் இன்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்..
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் நாள் தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரக்கூடிய நிலையில் இன்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதாளும் சுபமுகூர்த்ததினம் என்பதாலும் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இன்று ஞாயிற்று கிழமையை யொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது .மற்ற காலபூஜைகள் தொடந்து நடைபெற்று வருகிறது.
மேலும் இன்று விடுமுறை தினம் என்பதாளும் சுப முகூர்த்த தினம் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த மணமக்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் என அனைவரும் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4மணி நேரம்வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags :