அமெரிக்க ஆட்சியாளர்களோடு மோதும் எலான் மஸ்க்

அமெரிக்காவின் பெரும் தொழிலதிபரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்,அமெரிக்காவின் மிகப்
பெரிய சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்குவதாக அறிவித்ததிலிருந்து அவர் பெயர் சமூகவலைத்தளங்களில்
அதிகம் பகிரப்பட்டு வருகிறது .அவரும் தம் ட்விட்டரில் தொடர்ந்து கருத்துக்களை வெளிப்படையாக அறிவித்து வருகிறார் கடந்த காலத்தில் நான் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன், ஏனென்றால், அவர்கள் கருணைக் கட்சியாக இருந்தனர்.ஆனால் அவர்கள் பிரிவினை மற்றும் வெறுப்பின் கட்சியாக மாறிவிட்டனர், அதனால் என்னால் இனி அவர்களை ஆதரிக்க முடியாது இனி,குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன்.இப்போது, எனக்கு எதிராக அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறாா்கள் என்றுகருத்தை பகிா்நதுள்ள அவா் இன்னொரு பதிவில்அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது யதார்த்தமானது அல்ல .பொதுவாக, குறைந்த அதிகாரம் கொண்ட கட்சி ( தற்போது தேசிய அளவில் குடியரசுக் கட்சியினர்) மிதமான வாக்குகளைப் பெற மையத்தை நோக்கி நகர்கிறது, எனவே ஹவுஸ்/செனட்/ஜனாதிபதியின் கட்டுப்பாடு காலப்போக்கில் முன்னும் பின்னுமாக செல்கிறது என்று கருத்தை பதிவு . செய்துள்ளார்.
Tags :