ஜல்லிக்கட்டு ; காளையை அடக்குகிறவனுக்கு மட்டும்தான், பெண் மாலையிட்டாள்.
பண்டைய தமிழர்கள் தங்கள் வீரத்தை வாழ்வியலோடும் மட்டும் இல்லாமல் பண்பாட்டோடும் கலந்து வைத்திருந்தனர். ஆண் மகனுக்கு வீரமே புருஷ லட்சணமாக பார்க்கப்பட்டது. அந்த வீரம் குடும்பத்தை ,நாட்டை வாழ வைத்தது; பாதுகாத்தது. அதனால் தான் ,முல்லை நிலத்தில் உள்ள மக்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கு அவர்களால் வளர்க்கப்படும் காளையை அடக்குகிறவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.
கொல்லெறிந்து கோடு அஞ்சுவனை மறுமையிலும் புல்லாலே ஆயர் மகள்... என்ற சங்க இலக்கிய பாடல் இந்த உண்மையை பறைசாற்றும். ஜல்லிக்கட்டில் துள்ளித் திரியும் காளையை அடக்குகிறவனுக்கு மட்டும்தான், அந்தப் பெண் மாலையிட்டாள். மணமகனாக ஏற்றுக் கொண்டாள். அப்படி காளையை அடக்க சக்தி அற்றவனை ,அடுத்த ஜென்மத்தில் கூட அவள் நினைத்துப் பார்க்க மாட்டாள் என்பதுதான் இந்தப் பாடலின் வரிகள் சொல்லும் செய்தி..
. இன்றைக்கு ஜல்லிக்கட்டு வீரத்தின் வெளிப்பாடாக... போட்டியாக.... தமிழர் திருநாளில் கொண்டாடப்படுகின்றது. போருக்குச் சென்ற வீரர்கள் தங்கள் தினவை மேலும் வலுவூட்ட காளைகளோடு சண்டையிட்டு தம் வீரத்தை மெருகேற்றுவர்.
அப்படிப்பட்ட அந்த வீர விளையாட்டு அருகிவிடக் கூடாது என்பதற்கு தான், காலம் காலமாக கைத்திருநாளில் நாம் ஜல்லிக்கட்டு நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
இன்றைக்கு வாளெடுத்து போரிலே களம் காணும் சூழல் கிடையாது. அதன் வெளிப்பாடு வீடுகளில் காளைகளை வளர்த்து அதை வாடி வாசல் வழியாக களத்திற்கு கொண்டு வந்து காளையர்கள் அதோடு சண்டையிட்டு தாங்கள் பரம்பரை, பரம்பரையாக வீரம் உடையவர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு கூறு தான் ஜல்லிக்கட்டு ; ஏறு தழுவுதல் நிகழ்வுகள் ..
Tags :


















