சீனாவின் மூலோபாய கூட்டாளி ரஷ்யா சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி

by Admin / 08-03-2022 12:35:34pm
சீனாவின் மூலோபாய கூட்டாளி ரஷ்யா சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி

உக்ரேன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து தொடர்ந்து மறுத்து வரும் சீனா ரஷ்யாவை தங்களது மூலோபாய கூட்டாளி என தெரிவித்துள்ளது.

சீன பாராளுமன்ற கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி  உலகின் மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ரஷ்யா சீனாவில் உறவு ஒன்று என்றார்.

எவ்வளவு ஆபத்தான நிகழ்வுகள் நேர்ந்தாலும் தங்களுக்கு இடையிலான மூலோபாய கவனத்தை தக்கவைத்து சீனா ரஷ்யாவின் கூட்டாண்மை வளர்ச்சியையும் மேம்படுத்தும் என வாங்யி கூறினார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் பொருளாதார தடை தாண்டியும் ரஷ்யாவுக்கு பல்வேறு உதவிகளை சீனா செய்து வருகிறது

 

Tags :

Share via

More stories