வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட 103 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

by Editor / 31-03-2025 01:28:03pm
வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட 103 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 103 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 103 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via