விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்: பா. சிதம்பரம் வேண்டுகோள்

by Staff / 20-02-2024 12:15:21pm
விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்: பா. சிதம்பரம் வேண்டுகோள்

குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் (Twitter) கணக்கில், இந்த வாக்குறுதி பொருளாதார ரீதியாக உறுதியானது மற்றும் சாத்தியமானது. அரசின் எச்சரிக்கை வாதங்களைக் கண்டு விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, நாளை டெல்லி நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories