ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகளில் கைது. 100 சவரன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 100 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல், 2 ஆண்டுகளுக்கு பள்ளிக்கரணை பகுதியில் உள்ள பெரிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்ததாக காவல் துறையினரிடம் ஞானசேகரன் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. ஞானசேகரனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வரும் பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் இதுவரை ஞானசேகரன் கொள்ளையடித்த தங்க நகைகளில் சுமார் 100 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.
Tags : ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகளில் கைது. 100 சவரன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல்.