சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் - இபிஎஸ்

by Staff / 10-09-2023 04:27:29pm
சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் - இபிஎஸ்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்தால் அதனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும், மதுரை மாநாட்டிற்கு பிறகு அதிமுக எழுச்சி பெற்றிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது, அதிமுக புதிய நிர்வாகிகள் நியமிப்பது போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேசினார்.
 

 

Tags :

Share via

More stories