நடிகர் சங்கக் கட்டிடம்: ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம்

by Staff / 10-09-2023 04:21:59pm
நடிகர் சங்கக் கட்டிடம்: ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஷால், கார்த்தி உள்ளிட்டார் பல நடிகர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தேர்தலில் நாங்கள் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், சங்கத்தின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்க கட்டடத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories