லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

by Staff / 22-05-2024 04:38:02pm
லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி இன்று (மே 22) தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, நெல்லூர் சுன்னப்புபட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையின் நடுவே இருக்கும் டிவைடரைக் கடந்து மறுபுறம் வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், பேருந்தில் இருந்த 35 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via