சூப்பர் மார்க்கெட்டில் மது விற்பனை செய்ய வேண்டும்

by Staff / 22-07-2024 12:33:33pm
சூப்பர் மார்க்கெட்டில் மது விற்பனை செய்ய வேண்டும்

சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியர் முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு மது சப்ளை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் மது தரமாக இருப்பதாகவும், தமிழகத்தில் தரம் குறைந்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை வாங்கி சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய வேண்டும் என கோரிய அவரின் வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

 

Tags :

Share via