மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது
மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்று வருகிறார். இவரது மனைவி சுதாமதி (வயது 25. )இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மறைமலை நகரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பொழுது இருவரும் காதலித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. நேற்று முன் தினம் துணிகளை அயன் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருந்ததாக கூறி அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்துள்ளார். ரஞ்சித் குமார். சுதாமதி இறப்பில் சந்தேகம் உள்ளது என அவருடைய அண்ணன் சதீஷ் மதுராந்தகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், மதுராந்தகம் போலீசார் சுதாமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது, சுதா மதியின் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் இறந்திருக்கலாம் என மருத்துவரின் முதல் கட்ட ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் மதுராந்தகம் போலீசார் ரஞ்சித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர் முதல் கட்ட விசாரணையில் ரஞ்சித்குமார் கடந்த நவம்பர் 4ஆம் தேதி அதிகாலை காலை வேலையை முடித்து வீட்டுக்கு வரும்பொழுது சுதாமதி செல்போனில் யாருடனோ பேசியிருந்ததை கண்டு விசாரித்துள்ளார். செல்போனில் பேசியதை பற்றி சுதாமதி முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் மரக்கட்டையை கொண்டு பலமாக தலையில் தாக்கியுள்ளார். மயக்கம் அடைந்த நிலையில் இருந்த சுதாமதியின் கழுத்தில் அயன் பாக்ஸ் ஒயரை கொண்டு கழுத்தில் இறுக்கி கொலை செய்துள்ளார். காலை பொழுது விடிந்ததும் வேலைக்கு செல்வதற்காக துணிகளை அயன் செய்ய சொன்னதாகவும் அப்பொழுது மின்சாரம் தாக்கி சுதாமதி இறந்ததாகவும் உறவினிடம் கூறியுள்ளார். இதனால் சுதாமதி அவசர அவசரமாக புதைக்க இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தேன் என்று கூறியுள்ளார். அதன்பின்னர், மனைவியை கட்டையால் அடித்துக் கொன்று நாடகம் ஆடிய ரஞ்சித்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அதை பின்பு சிறையில் அடைத்தனர்.
Tags :