திமுக கூட்டணியில் விசிகவும் அதிக தொகுதிகளை கேட்கும்-திருமாவளவன். 

by Editor / 11-06-2025 07:57:41am
திமுக கூட்டணியில் விசிகவும் அதிக தொகுதிகளை கேட்கும்-திருமாவளவன். 

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்பது வெறும் பில்டப் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக கூட்டணி ஒரு வடிவமே பெறவில்லை என்றும், இந்த நொடிவரை திமுக கூட்டணி மட்டுமே வடிவம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் விசிகவும் அதிக தொகுதிகளை கேட்கும் எனத் தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை முடிவில் சீட் பங்கீடு உறுதிசெய்யப்படும் என்றார்.

 

Tags : திமுக கூட்டணியில் விசிகவும் அதிக தொகுதிகளை கேட்கும்-திருமாவளவன். 

Share via