பழுதாகி நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து 5 பேர் பலி 

by Editor / 04-06-2023 09:37:23am
பழுதாகி நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து 5 பேர் பலி 

 காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி நின்றிருந்த சரக்கு லாரி மீது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்து .காரில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ரத்தினம், குழந்தைகள் விஜயலட்சுமி, தேஜாஸ், இரண்டு மாத ஆண் குழந்தை மூன்று பேர் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.உடன் குழந்தைகளின் தந்தை ராமஜெயம்  படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.பாலு செட்டி சத்திரம் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via

More stories