கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு எந்நேரமும் கவிழலாம்..!

by Admin / 16-08-2021 10:54:29am
கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு எந்நேரமும் கவிழலாம்..!

கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு எந்நேரமும் கவிழலாம் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பு போன்று அரசில் குழப்பம் தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும்,

 இந்த அரசு பதவி காலம் முழுவதும் நிறைவு செய்யும் என்பது சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போராடுவதுடன், அறிக்கைகளையும் விடுவதும் அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ளார்

. இவ்வாறு அவர் கூறியுள்ளது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via