பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்கும் டிரம்ப்
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக கூறிவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை சந்திக்க இருக்கிறார். 5 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அசீம், ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து அவருடன் மதிய உணவு விருந்தில் கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















