தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி- தமிழக அரசு. 

by Staff / 14-10-2025 09:54:01pm
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி- தமிழக அரசு. 

தீபாவளி நாளான அக்.20 ஆம் தேதி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதித்துள்ளது தமிழக அரசு. இதன்படி காலை 6-7 மற்றும் மாலை 7-8 ஆகிய நேரங்களில் மட்டுமே ஒலி எழுப்பும்  பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நேரம் தவறி பட்டாசு வெடித்த பலர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி 2018 முதல் பட்டாசு வெடிப்பதற்கு நேர நிர்ணயம் செய்து வருகிறது தமிழக அரசு.

 

Tags : தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி- தமிழக அரசு. 

Share via