தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் பயனில்லை: ராமதாஸ்

by Staff / 31-01-2024 05:02:46pm
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் பயனில்லை: ராமதாஸ்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் பயனில்லை'''தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தாக்கல் செய்த வேளாண் நிதி நிலை அறிக்கையால் எந்த பயனுமில்லை'' என பா. ம. க. , நிறுவனர் ராமதாஸ் கூறினார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில், நேற்று பா. ம. க. , சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. கூடவே வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையையும் வெளியிட்டார். பின் ராமதாஸ், அளித்த பேட்டி: வேளாண் வளர்ச்சியில்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டே வேளாண் வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை கடந்த 17 ஆண்டுகளாக பா. ம. க. , வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத இக்காரியத்தை பா. ம. க. , சாதனையாகவே கருதுகிறது. தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில், 70 சிறப்புத் திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் 7 திட்டங்கள் கூட செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. இதை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. புதிய பாசனத் திட்டங்களும் இடம்பெறவில்லை. இதனால் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் தாக்கல் செய்த வேளாண் நிதி நிலை அறிக்கையால் பயனும் ஏற்படவில்லை. தமிழகத்துக்கு வேளாண் துறையை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி தேவையாக உள்ளது. எனவே, தமிழக அரசு வேளாண் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via