இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

by Editor / 05-08-2023 10:01:42am
இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பே திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டு இருந்தார். இந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது காணொலி வாயிலாக நடைபெறும் எனவும், கலைஞர் நூற்றாண்டு விழாவை குறிப்பிட்டு இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo