ரூபாய் 100கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்.

by Staff / 29-04-2022 12:48:46pm
ரூபாய் 100கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்.

டெல்லி ஷாகின் பாக்கில் வீட்டில் சாக்கு பைகளில் கட்டி வைத்திருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயினை கைப்பற்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஒருவரை கைது செய்தனர்.

அதே பகுதியில் ஒரு மரத்தின் கீழ் இருந்து 30 லட்ச ரூபாய் பணம், மற்றும் பணம் எண்ணும்  இயந்திரம்,  47 கிலோ மதிப்பிலான போதைப்பொருள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்டது ஹவாலா பணமா அல்லது சட்ட விரோத செயல்களுக்காக பாகிஸ்தான் அல்லது ஆப்கானில் இருந்து கடத்தி வரப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் வீடு வாடகைக்கு எடுத்து ஹெராயினை கடத்த இருந்த நிலையில் பிடிபட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories