இஸ்ரேல் ஏவுகணைகளுடன், ரஷ்ய ஹெலிகாப்டர்களை சேர்க்க இந்திய விமான படை திட்டம்.

by Staff / 29-04-2022 12:47:00pm
இஸ்ரேல் ஏவுகணைகளுடன், ரஷ்ய ஹெலிகாப்டர்களை சேர்க்க இந்திய விமான படை திட்டம்.

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையில் சீனா ஊடுருவலை தவிர்க்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், ரஷ்யாவிடமிருந்து வாங்கிய     Mi- 17V5  வகை ஹெலிகாப்டர்களில் இஸ்ரேலின் நவீன டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளை சேர்க்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.30 கிலோ மீட்டர் தூர அளவில் வான் மற்றும் தரையில் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்துடன் கூடிய டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலின் தளவாட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கொள் முதல் செய்ய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

இதன் முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலான ஏவுகணைகளை வாங்கவும், ஏவுகணைகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் உள்நாட்டிலேயே தயாரிக்கவும், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via