இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்.

by Admin / 27-11-2021 02:49:20pm
இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்.



வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்தில் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு இடையேயான 2+2 பேச்சுவாா்த்தையின் முதல் கூட்டம் 6 டிசம்பர் 2021 அன்று புது தில்லியில் நடைபெறும். மாண்புமிகு  ராஜ்நாத் சிங் மற்றும் மாண்புமிகு வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இந்த உரையாடலில் இந்திய தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஹெச்.இ. திரு. செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஹெச்.இ. திரு. செர்ஜி ஷோய்கு 2+2பேச்சுவாா்த்தைகாக 5-6 டிசம்பர் 2021 அன்று புது தில்லிக்கு வருகை தருகிறார்.

28 ஏப்ரல் 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புதின் அவர்களின் தொலைபேசி உரையாடலின் போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி 2+2 பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சவாா்த்தைகான நிகழ்ச்சி நிரல் பரஸ்பர நலன் சார்ந்த அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை உள்ளடக்கும். .

2+2 பேச்சுவாா்த்தைகான புதிய நெறிமுறையை நிறுவுவது இரு நாடுகளுக்கும் இடையிலான  கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தொிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

 

 

 

Tags :

Share via